மகான்கள், சித்தர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், பாண்டவர்கள், நவக்கிரக நாயகர்கள் தினமும் அருளும் சுவடிகள் Contact தொடர்பு

Sunday, October 26, 2014

video: கண்ட நாள் முதலாய்...

ராகம்: மதுவந்தி
எழுதியவர்: திரு என்.எஸ். சிதம்பரம்
பாடியவர் : சுதா ரகுநாதன்

காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி

வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை
(கண்ட நாள் முதலாய்…)

நீலமயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசமுடன் கலந்த பாசமும் மறக்கவில்லை

கோலக்குமரன் மனக்கோயிலில் நிறைந்துவிட்டான்
குறுநகை தனைக்காட்டி நறுமலர் சூட்டிவிட்டான்
(கண்ட நாள் முதலாய்…)


No comments:

Post a Comment